திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் நடைபெறும் விழாக்கள் விவரம் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் நடைபெறும் விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் நடைபெறும் விழாக்கள் விவரம் வெளியீடு
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் அறிவித்து வருகிறது. அதன்படி இந்தமாதம் (செப்டம்பர்) நடைபெறும் முக்கிய விழாக்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (2-ந் தேதி) நாத நீராஜனம் மேடையில் பாலகாண்டா முதல் அகண்ட பாராயணமும், 3-ந் தேதி முதல் 18-ந் தேதிவரை வசந்த மண்டபத்தில் ஷோடா சதினா பாலகாண்ட பாராயண தீட்சையும் நடக்கிறது. 8-ந் தேதி பலராம ஜெயந்தி, 9-ந் தேதி வராஹ ஜெயந்தி, 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி மற்றும் 19-ந் தேதி அனந்த பத்மநாப விரதம் ஆகியவை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com