

புதுடெல்லி,
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அருண் ஜெட்லி நிதி மந்திரியாக இருந்தார். அவர் மறைந்த பிறகு, 2019-ம் ஆண்டு முதல் நிர்மலா சீதாராமன் நிதி மந்திரி பொறுப்பை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளில் 9 முறை மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதிக பட்சமாக 2020-ம் ஆண்டு 2 மணி 42 நிமிடங்கள் அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். குறைவாக, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டை 56 நிமிடங்களில் தாக்கல் செய்து முடித்தார்.
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையாற்றிய ஆண்டு மற்றும் நேர விவரம் வருமாறு:-
2019 - 2 மணி 17 நிமிடங்கள்
2020 - 2 மணி 42 நிமிடங்கள்
2021 - 1 மணி 50 நிமிடங்கள்
2022 - 1 மணி 32 நிமிடங்கள்
2023 - 1 மணி 27 நிமிடங்கள்
2024 (இடைக்கால பட்ஜெட்) - 56 நிமிடங்கள்
2024 (முழு பட்ஜெட்) - 1 மணி 25 நிமிடங்கள்
2025 - 1 மணி 14 நிமிடங்கள்
2026 - 1 மணி 27 நிமிடங்கள்