நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீன் கோரி திலீப் மீண்டும் மனு தாக்கல்

நடிகை கடத்தல் வழக்கில் ஜாமீன் கோரி திலீப் மீண்டும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகை கடத்தல் வழக்கு: ஜாமீன் கோரி திலீப் மீண்டும் மனு தாக்கல்
Published on

திருவனந்தபுரம்,

பிரபல கேரள நடிகை ஒருவரை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பபட்ட வழக்கில் நடிகர் திலீப் ஜூலை 10 ந்தேதி கைது செய்யப்பட்டு ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். திலீப்பின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி அங்கமலி நீதிமன்றத்தில் திலீப் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், தனது நீதிமன்ற காவல் 60 நாட்களை கடந்துவிட்டதாகவும் தன் மீதான விசாரணை முடிந்துவிட்டதாகவும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த அங்கமலி நீதிமன்றம், நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது.

திலீப் ஜாமீன் கோரி தாக்கல் செய்த 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 5 முறையாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com