தேவ தீபாவளி திருவிழா; கங்கை நதிக்கரையில் ‘மகா ஆரத்தி’

உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில், இன்றைய தினம் ‘தேவ தீபாவளி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
தேவ தீபாவளி திருவிழா; கங்கை நதிக்கரையில் ‘மகா ஆரத்தி’
Published on

வாரனாசி,

கார்த்திகை பவுர்ணமி தினமான இன்று தமிழகத்தில் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் ஆகிய மலைகளில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர்.

அதே சமயம் வட மாநிலங்களில், இன்றைய தினம் தேவ தீபாவளி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக வடமாநில மக்கள், நதிக்கரைகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்கின்றனர்.

அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று கங்கை நதிக்கரையில் மகா ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, கங்கை நதிக்கு மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com