தேவேகவுடா தான் எனது அரசியல் குரு; ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. சொல்கிறார்

தேவேகவுடா தான் எனது அரசியல் குரு என்று ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
தேவேகவுடா தான் எனது அரசியல் குரு; ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. சொல்கிறார்
Published on

பெங்களூரு:

ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. தாவணகெரேயில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். ஆனால் தேவேகவுடா தான் எனது அரசியல் குரு. கடந்த 2005-ம் ஆண்டு என்னை தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்தவர் தேவேகவுடா. நான் அரசியல் இந்த அளவுக்கு வளர காரணமானவரும் அவர் தான். நான் எந்த சாதியையும் குறைத்து பார்ப்பது இல்லை. ஆனால் பா.ஜனதா தான் சாதிகளை குறைத்து மதிப்பிடுகிறது.

சித்தராமையா ஆட்சியில் இருந்தபோது முஸ்லிம்களின் மேம்பாட்டிற்காக ரூ.3,150 கோடி ஒதுக்கீடு செய்தார். இதற்காக அவருக்கு நாங்கள் நன்றிக்கடன் செலுத்த வேண்டும். அதனால் சித்தராமையா பிறந்த நாள் விழாவில் அதிகளவில் முஸ்லிம்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முஸ்லிம்களை சந்தித்து கூறி வருகிறேன்.

இவ்வாறு ஜமீர்அகமதுகான் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com