பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸ் நியமனம்

பீகார் சட்டப்பேரவை தேர்தல் பாஜக பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸ் நியமனம்
Published on

புதுடெல்லி,

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.எனவே 243 தொகுதிகளை அடங்கிய பீகாரில் , சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 3வது கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வந்தது .எனவே அங்குள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவின் பொறுப்பாளராக மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் வழங்குவது என்பது தொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, தேவேந்திர பட்னாவிஸ் பாஜகவின் பீகார் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com