ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் பட்னாவிஸ் ஆலோசனை

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசனை நடத்தினார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் பட்னாவிஸ் ஆலோசனை
Published on

நாக்பூர்,

மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா-சிவசேனா கூட்டணியில் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள மோதலால் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவதற்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக அக்கட்சி பா.ஜனதாவை மிரட்டி வருகிறது. இதனால் மராட்டிய மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று சந்தித்து பேசினார். அப்போது, மாநில அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com