திருப்பதி கோவில் அறக்கட்டளைக்கு பக்தர் ஒருவர் ரூ.10 கோடி நன்கொடை

திருப்பதியில் பக்தர்களுக்கு தினந்தோறும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பதி கோவில் அறக்கட்டளைக்கு பக்தர் ஒருவர் ரூ.10 கோடி நன்கொடை
Published on: 

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் சராசரியாக ரூ.4 கோடி வரை உண்டியல் மூலம் காணிக்கையாக கிடைக்கிறது. தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்களை தவிர தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு உலகமெங்கிலும் உள்ள பக்தர்கள் ரொக்கமாக கோடிக்கணக்கில் காணிக்கை வழங்கி வருகின்றனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளை நடத்தப்பட்டு வருகிறது. அதன் சார்பில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு ஐதராபாத்தைச் சேர்ந்த கோடாலி ஸ்ரீகாந்த் என்ற பக்தர் ரூ.10 கோடி நன்கொடை அளித்தார். ஸ்ரீவாரி கோவிலில் ரங்கநாயகுல மண்டபத்தில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் அவர் ரூ.10 கோடிக்கான காசோலையை அளித்தார். அவரை சவுத்ரி பாராட்டினார்.

X