சாலை விபத்தில் அய்யப்ப பக்தர்கள் பலி: தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் இரங்கல்

சாலை விபத்தில் அய்யப்ப பக்தர்கள் பலியான சம்பவத்திற்கு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் அய்யப்ப பக்தர்கள் பலி: தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் இரங்கல்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் வழிபாட்டை முடித்து விட்டு ராமேசுவரம் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும்போது, புதுக்கோட்டையை அடுத்த திருமயம் அருகே அவர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் உயிர்ப்பலி ஏற்பட்டதை அறிந்ததும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்த அவர் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com