திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்... வி.ஐ.பி. தரிசனம் ரத்து!

ரூ.6.94 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி
Published on

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன் எப்போதும் இல்லாத அளவு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நாளை முதல் வருகிற 14-ந் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் சூழல் உள்ளது.

வி.ஐ.பி. தரிசனம் ரத்து

இதனால் நாளை மறுநாள் வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை முக்கிய பிரமுகர்களிடம் கொண்டுவரப்படும் தரிசனத்திற்காக அனைத்து பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உண்டியல் காணிக்கை

வி.ஐ.பி பிரேக் தரிசனம் தடை செய்யப்பட்டதால் நாளை மறுநாள் சாதாரண பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நேற்று சாதனை அளவாக ஒரே நாளில் ரூ.6.94 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் ஏற்கனவே 2 முறை ரூ.6 கோடிக்கு மேல் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.

சாமி தரிசனம்

திருப்பதியில் நேற்று 69,771 பேர் தரிசனம் செய்தனர். 25,888 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.6.94 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.42 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com