ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது சிக்கிய அதிகாரி: சிபிஐ கைது செய்ததால் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

5 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியபோது அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது சிக்கிய அதிகாரி: சிபிஐ கைது செய்ததால் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
Published on

காந்திநகர்,

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி (வயது 44). இவர் தொழிலதிபரிடமிருந்து வெளிநாட்டிற்கு உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் வழங்க 9 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதன்படி, முதற்கட்டமாக நேற்று தொழிலதிபரிடமிருந்து பிஷோனி 5 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது, அவரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.

பின்னர், இரவு முழுவதும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் 4-வது மாடியில் உள்ள பிஷோனியின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இரவு முழுவதும் சோதனை நீடித்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் சோதனை நிறைவடைந்தது. தொடர்ந்து லஞ்ச புகாரில் பிஷோனியை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் முற்பட்டனர்.

அப்போது, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் 4-வது மாடியில் இருந்து பிஷோனி கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த பிஷோனி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com