5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு முககவசம் அணிவிக்க கூடாது - மத்திய அரசு

5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Image courtesy : tv9kannada.com
Image courtesy : tv9kannada.com
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலையின் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும், மூன்றாவது அலை குறித்த பயம் அதிகரித்துள்ளது. மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறி உள்ளனர்.

இந்நிலையில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) வெளியிட்டுள்ளது. அதில், 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பெற்றோர் மற்றும் டாக்டர்களின் கண்காணிப்பில் முக கவசம் அணியலாம்.

18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. தேவைப்பட்டால் எச்ஆர்சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com