ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் தீரஜ் சேத்

ராணுவ தலைமை தளபதி உபேந்திர திரிவேதி இன்று பணி ஓய்வு பெற்றார்.
ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் தீரஜ் சேத்
Published on

புதுடெல்லி,

நாட்டின் 31-வது ராணுவ தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத் தற்போது பொறுப்பேற்று உள்ளார்.

உபேந்திர திரிவேதி பணி ஓய்வு

நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பணிக்காலம் இன்றுடன் நிறைவுபெற்றது. இதனை தொடர்ந்து உபேந்திர திரிவேதி இன்று பணி ஓய்வு பெற்றார். டெல்லியில் அவருக்குபிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை தீரஜ் சேத் ஏற்றுக்கொண்டார்.

லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத்

இதனை தொடர்ந்து நாட்டின் 31-வது ராணுவ தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத் தற்போது பொறுப்பேற்றுக்கொண்டார். டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 1986-ல் ராணுவத்தில் சேர்ந்த தீரஜ் சேத், ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சி எதிர்ப்பு படை, பாலைவனப் பகுதிகளில் கவசப் படைப்பிரிவு என ஏறக்குறைய 40 ஆண்டுகள் பல்வேறு கடினமான சூழல்களில் பணியாற்றிய மிகச் சிறந்த அனுபவம் கொண்டவர் ஆவார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com