கட்சிக்காக 9 பேரை கொலை செய்தாரா? நிதிஷ்குமார் கட்சி எம்.எல்.ஏ. விளக்கம்

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மாநில அரசியலில் புயலை கிளப்பியது.
நிதிஷ்குமார் கட்சி எம்.எல்.ஏ. விளக்கம்
Published on: 

பாட்னா,

நிதிஷ் குமார் அரசியலில் காலுான்ற திணறிய காலத்தில், அவருக்கு உதவுவதற்காக, ஒன்பது பேரை தீர்த்துக் கட்டினேன்,என பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ., அனந்த் சிங், 65, கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, நான் அப்படி சொல்லவே இல்லை,என அவர் பல்டி அடித்தார்.

பீகாரில் பாஜகவை சேர்ந்த முதல்-மந்திரி சாம் ராட் சவுத்ரி தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில், முன்னாள் முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், முக்கிய கூட்டணி கட்சியாக உள்ளது. இந்த சூழலில், பீகார் சட்ட மேல்சபையில் காலியாக உள்ள எட்டு இடங்களுக்கு வரும், 23ல் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், தன் அரசியல் எதிரியான நீரஜ் குமாருக்கு ஐக்கிய ஜனதா தளம் சீட் வழங்கியதால், அக்கட்சி யின் மூத்த தலைவரும், பாட்னாவின் மோகாமா சட்டசபை தொகுதியின் எம். எல்.ஏ.,வுமான அனந்த் சிங் அதிருப்தி அடைந்தார்.

இந்நிலையில், அனந்த்சிங் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

எனக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையிலான உறவு தனித்துவமானது. பல ஆண்டு கால நட்புறவு அது. நிதிஷ் குமார் அரசியலில் தடம் பதிக்க முடியாமல் போராடிய காலத்தில், அவருக்கு துணையாக நின்றேன்.

அனந்"அவருக்கு உதவுவ தற்காக, ஒன்பது பேரை கொலை செய்தேன். ஆனால், எனக்கு எதிராக செயல்பட்ட நீரஜ் குமாருக்கு கட்சி தலைமை தற்போது சீட் வழங்கி இருப்பது வேதனை அளிக்கிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மாநில அரசியலில் புயலை கிளப்பியது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான ராஜுவ் ரஞ்சன் அனந்த் சிங் கருத்துக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. நிதிஷ் குமார் களங்கமற்ற அரசியல் வரலாற்றை கொண்டவர். கிரிமனல்களுடன் கூட்டு வைப்பதோ அல்லது வன்முறையில் ஈடுபடுவதோ அவரது வழக்கம்மல்ல.

இத்தகைய ஆதாரமற்ற கருத்துகளை கட்சியும் கவனத்தில் கொள்ளாது. மக்களும் இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட் டார்கள் என்றார்.

கட்சியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தன் கருத்தை அனந்த் சிங் திரும்ப பெற்றார்.

இதனையடுத்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது 'லாலுபிரசாத் ஆட்சிக்காலத்தில் எனது ஆதரவாளர்கள் 9 பேர் கொல்லப்பட்டனர். இதை நினைவூட்டவே விரும்பினேன். நிதிஷ்குமாருக்கு ஆதரவாக இருந்ததால் அவர்களை லாலு பிரசாத் கட்சியினர் கொன்றனர் என்றுதான் சொல்ல வந்தேன். ஆனால் எனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com