

மேலும் இதற்கு ஆதாரமாக முன்னாள் உளவுத்துறை அதிகாரி ராஷ்மி சுக்லா எழுதிய கடிதத்தை அவர் மேற்கொள் காட்டினார். இந்த கடிதத்தில் சில தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப் பட்ட தகவல்களும் இருந்தன. இதனால் ராஷ்மி சுக்லா அனுமதி யின்றி தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் நடந்து வரும் விசாரணையில், போலீஸ் இடமாற்றம் குறித்த ஊழல்களை கண்டறிய சில தொலைபேசி எண்களை ஒட்டுக்கேட்க அரசு அனுமதி அளித்ததாக தெரிவித்தார்.மேலும் ஒரு சில தொலைபேசி எண்களை கண்காணிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டதாகவும் அவர் சார்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மந்திரியுமான நவாப் மாலிக் நேற்று கூறியதாவது:-
சில தொலைபேசி எண்களை ஒட்டுக்கேட்க முறையான அனுமதி கோரியதாக ராஷ்மி சுக்லாவின் வக்கீல் கோர்ட்டில் கூறியுள்ளார். இருப்பினும் இதை பயன்படுத்தி அவர் அதிகாரிகளை தவறாக வழிநடத்தி உள்ளார்.தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்க ஐ.பி.எஸ். அதிகாரியான ராஷ்மி சுக்லா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவிடம் அனுமதி பெற்றாரா என்பதை கண்டறிவது அவசியம். அவர் தேசத்துரோகம் மற்றும் தேசிய நலன் என்ற போலி காரணங்களின் கீழ் இவ்வாறு அனுமதி கோரியுள்ளார். ஆனால் உண்மையில், அரசியல் எதிரிகளின் அழைப்புகளை அவர் ஒட்டுக்கேட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.