வாக்குப்பதிவு எண்ணிக்கையில் வித்தியாசம்; போதிய ஆதாரங்கள் தற்போது இல்லை - சரத் பவார் கருத்து

வாக்குப்பதிவு எண்ணிக்கையில் வித்தியாசங்கள் இருப்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் தற்போது இல்லை என சரத் பவார் தெரிவித்துள்ளார்.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

மும்பை,

மராட்டிய மாநில தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின்னர் வெளியான தகவல்களின்படி, வாக்குப்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 7.83 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடிதம் எழுதினார். மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து பாய் ஜக்தாப் உள்ளிட்ட பல்வேறு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு எண்ணிக்கையில் வித்தியாசங்கள் இருப்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் தற்போது இல்லை என தேசியவாத காங்கிரஸ்(சரத்சந்திர பவார்) கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-

"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருப்பதாக கூறப்பட்டாலும், தற்போது அதனை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. சிலர் மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும். எனக்கு இதில் பெரிய அளவில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்."

இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com