மின்னணு கல்வி முறைகள் மேலும் வலுப்படுத்தப்படும் - மத்திய கல்வி மந்திரி தகவல்

கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட மின்னணு கல்வி முறைகள் மேலும் வலுப்படுத்தப்படும் மத்திய கல்வி மந்திரி தெரிவித்துள்ளார்.
மின்னணு கல்வி முறைகள் மேலும் வலுப்படுத்தப்படும் - மத்திய கல்வி மந்திரி தகவல்
Published on

புதுடெல்லி,

கொரோனா காலத்தில் கல்வி கற்பிப்பதற்காக, பி.எம். இ-வித்யா, தேசிய மின்னணு கல்வி கட்டமைப்பு போன்ற மின்னணு முயற்சிகள் பின்பற்றப்பட்டன. இவற்றின் முன்னேற்றம் குறித்து மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று ஆய்வு செய்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக, மின்னணு கல்வி முறைக்கு மாற வேண்டியதாகி விட்டது. இந்த கல்வி முறைகள் மேலும் வலுப்படுத்தப்படும். நிறுவனமயமாக்கப்படும். துடிப்பான மின்னணு கல்வி முறைகள், மாணவர்களுக்கு கற்பதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com