டிஜிட்டல்மயமாக்கல் நிழல் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் - அமைச்சர் மேக்வால்

நாட்டின் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் வேளையில் அரசின் டிஜிட்டல் முயற்சி கருப்புப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முக்கியமானது என்று நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
டிஜிட்டல்மயமாக்கல் நிழல் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் - அமைச்சர் மேக்வால்
Published on

மும்பை

இந்த நாட்டில் 22-26 சதவீதம் நிழல் பொருளாதாரமாக இருக்கிறது. அதாவது கருப்புச் சந்தை நடவடிக்கைகள், வருமானத்தை மறைப்பது போன்றவை இருக்கின்றன. இந்தச் சதவீதம் பெரியதான ஒன்று. நாட்டின் நலனுக்கு எதிரானது. நிழல் பொருளாதாரம் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சியை தடுக்கிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்பு நாடு டிஜிட்டல்மயமாவதை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அது நிழல் பொருளாதாரத்தை கண்காணிக்க உதவுகிறது என்றார் அமைச்சர்.

2017 ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்களுக்கான வருடம் என்று அறியப்படும் என்றார் மேக்வால். ஜி எஸ் டி அறிமுகம், ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைப்பு போன்ற நடவடிக்கைகள் இந்த ஆண்டை இப்படி நினைக்க வழிசெய்துள்ளன என்றார் அமைச்சர்.

இந்தியாவில் சரக்கு போக்குவரத்தைக் கையாள கட்டணம் அதிகம். ஜூலை 1 ஆம் தேதி ஜி எஸ் டி வந்தப் பிறகு முன்னேறிய நாடுகளின் கட்டணங்களுக்கு இணையாக மாறிவிடும் என்றார் அமைச்சர் மேக்வால்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com