இந்தி நடிகர் திலீப் குமாரின் பெஷாவர் வீடு இடிந்து விழுந்தது

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் பாகிஸ்தானில் பிறந்தவராவார். இவருடைய பாரம்பரிய வீடு பெஷாவர் நகரிலுள்ளது. இந்த வீடு பாழடைந்த நிலையில் இடிந்து விட்டதாக தகவல் வந்துள்ளது.
இந்தி நடிகர் திலீப் குமாரின் பெஷாவர் வீடு இடிந்து விழுந்தது
Published on

பெஷாவர்

விரைவில் அங்கு புதிய வீடு பழைய தோற்றத்திலேயே அமைக்கப்படும் என்று தொடர்புடைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வீடு 2014 ஆம் ஆண்டில் மாகாண அரசினால் தேசிய பாரம்பரிய சொத்தாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் போதிய கவனம் செலுத்தப்படாததால் இந்நிலைக்கு ஆளானதாக பல முக்கியஸ்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.திலீப் குமார் 1922 ஆம் ஆண்டில் இங்கு பிறந்து தனது பதின் வயதுகளில் மும்பை சென்று திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடத் துவங்கினார்.

வாஹேதுல்லா என்பவர் கூறுகையில் தான் ஆறு முறை அதிகாரிகளிடம் மனுக்களை அளித்ததாகவும் ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனவும் கூறினார்.

திலீப் குமாரின் சாய்ரா பானு வீடு இடிந்த விஷயம் கேட்டு வருத்தப்பட்டார் என்றும் அவர் கூறினார். ஆனால் தொல்லியல்துறையின் இயக்குநரோ இது மறைமுக ஆசிர்வாதம் ஏனெனில் புதிய வீட்டை பழைய தோற்றத்திலேயே அமைக்க முடியும் என்றும், இடிந்த வீட்டை பராமரிப்பது கடினமான பணியாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

திலீப் குமார் மட்டுமின்றி பல பிரபல பாலிவுட் நட்சத்திரங்களின் முன்னோர் வீடுகள் பெஷாவரில் உள்ளன. இவர்களில் ராஜ்கபூர் குடும்பம், ஷாருக் கான் மற்றும் சமீபத்தில் மறைந்த வினோத் கன்னா (அக்ஷய் கன்னாவின் தந்தை) ஆகியோர் அடங்குவர். பாகிஸ்தான் அரசு அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான நிஷா-ஏ-இம்தியாஸ் 1998 ஆம் ஆண்டில் வழங்கி கௌரவித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com