தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் - டெல்லி ஐகோர்ட்

தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என கூறி அவரது மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் - டெல்லி ஐகோர்ட்
Published on

புதுடெல்லி,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் கடந்த முறை டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். இந்த முறையும் தொப்பி சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். ஆனால் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத்தாக்கல் அளித்தவர்கள் பலரும் தொப்பி சின்னம் வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒரே சின்னத்தை பலரும் கேட்டால் குலுக்கல் முறையில் அந்த சின்னம் ஒதுக்கப்படும். எனவே சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கி உள்ள டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தநிலையில் டி.டி.வி.தினகரன் தனக்கு "தொப்பி" சின்னத்தை ஒதுக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது . இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை மாலை 4 மணிக்கு தள்ளி வைத்தார்.

மாலை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் "தொப்பி" சின்னத்தை ஒதுக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரிய தினகரனின் கோரிக்கை டெல்லி ஐகோர்ட் நிராகரத்தது. தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com