அக்டோபர் மாதம் முதல் பெங்களூரு - சுவிட்சர்லாந்து இடையே நேரடி விமான சேவை

சுவிட்சர்லாந்துக்கு நேரடி விமானம் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
அக்டோபர் மாதம் முதல் பெங்களூரு - சுவிட்சர்லாந்து இடையே நேரடி விமான சேவை
Published on

பெங்களூரு,

பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏராளமான நாடுகளுக்கு நேரடி விமான சேவை உள்ளது. இருப்பினும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு இதுவரையில் நேரடி விமான சேவை இல்லை. இணைப்பு விமான சேவை தான் இருந்து வந்தது.

இதனால் பெங்களூருவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு நேரடி விமானம் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி பெங்களூருவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த விமான சேவை வருகிற அக்டோபர் மாதம் முதல் செயல்பட இருக்கிறது.

வாரத்தில் 5 நாட்களுக்கு பெங்களூரு -சுவிட்சர்லாந்து இடையே நேரடி விமானங்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் பெங்களூரு சுவிட்சர்லாந்து இடையேயான தொழில் வர்த்தகம், தகவல் தொழில்நுட்ப துறை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற் றம் ஏற்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com