தசரா விடுமுறைக்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை - தலைமை நீதிபதி நம்பிக்கை

தசரா விடுமுறைக்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை தொடங்கப்படும் என தலைமை நீதிபதி ன்.வி.ரமணா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தசரா விடுமுறைக்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை - தலைமை நீதிபதி நம்பிக்கை
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக பொறுப்பேற்ற 9 நீதிபதிகளுக்கு பெண் வக்கீல்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணையை தொடங்குவதற்கு பெரும்பாலான வக்கீல்கள் தயக்கம் தெரிவிக்கிறார்கள்.

மூத்த வக்கீல்களும் நேரடி விசாரணையில் பங்கேற்பதில் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் நேரடி விசாரணையை தொடங்குவதில் நீதிபதிகளுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. தசரா விடுமுறைக்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கமான விசாரணை தொடங்கப்படும். பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மாவட்ட கோர்ட்டுகளில் 40 சதவீதமாகவும், ஐகோர்ட்டுகளில் 11 சதவீதமாகவும் உள்ளது. நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் அளிப்பது உரிமை சார்ந்த விஷயமாகும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com