

மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நேரடி வரி வருவாய்
2021-2022-ம் நிதி ஆண்டின் 2-வது காலாண்டு முடிவடைய உள்ள நிலையில் இதுவரை மொத்தம் ரூ.6 லட்சத்து 45 ஆயிரத்து 679 கோடி நேரடி வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளது.முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த வசூல் ரூ.4 லட்சத்து 39 ஆயிரத்து 242 கோடியாக இருந்தது. தற்போதைய காலத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 47 சதவீதம் அதிகமாக வரி வசூலாகி உள்ளது.2019-2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போதைய வசூல் 16.75 சதவீதம் அதிகமாகும். 2019-2020-ம் ஆண்டு காலகட்டத்தில் ரூ.5 லட்சத்து 53 ஆயிரத்து 63 கோடி வரி வசூலானது.
அட்வான்ஸ் வரி
2021-2022-ம் நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு தொடங்கிய ஜூலை 1-ந்தேதி முதல் தற்போதைய தேதி வரை ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 71 கோடி அட்வான்ஸ் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டைவிட 51.50 சதவீதம் அதிகமாகும். இந்த வரி வசூல் அடுத்த காலாண்டில் அதிகரிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.