

புதுடெல்லி,
ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய தடகள வீராங்கனை தீபா மாலிக். இவர் நேற்று அரியானா மாநில பா.ஜனதா கட்சி தலைவர் சுபாஷ் பாராலா, பொதுச் செயலாளர் அனில் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். அந்த மாநிலத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்படவில்லை. எனவே தீபா மாலிக் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.