

இந்த கொரோனா வைரஸ், அதிக தொற்றை ஏற்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்திக்கு தப்பிக்கும் பிறழ்வை கொண்டுள்ளது.ஆனால் இது நாட்டிலோ அல்லது மேற்கு வங்காளத்திலோ கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கு காரணம் ஆகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
இந்த புதிய வைரஸ், பி.1.618 என அழைக்கப்படுகிறது. இது இரட்டை பிறழ்வு வைரஸ் என அறியப்படுகிற பி.1.617 வைரசில் இருந்து மாறுபட்டதாகும். இதுகுறித்து டெல்லி சி.எஸ்.ஐ.ஆர். மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் இயக்குனர் அனுராக் அகர்வால் கூறுகையில், இதற்காக அலறத்தேவையில்லை. நிலையான பொது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது போதுமானது என குறிப்பிட்டார்.