சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு 3 நாட்கள் நீதிமன்றக் காவல்

டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியின் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு 3 நாட்கள் நீதிமன்றக் காவல்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து டூல்கிட்டை பகிர்ந்த திஷா ரவி கைது கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு எதிராக சதி மற்றும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 நாள் போலீஸ் காவலில் திஷா ரவி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் திஷா ரவி இன்று ஆஜர்படுத்தட்டார்.

வழக்கு தொடர்பான ஆதாரங்களை சீர்குலைக்க வாய்ப்பு உள்ளதால் திஷா ரவிக்கு எதிரான நீதிமன்றக்காவலை நீட்டிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்டது. இதையடுத்து, திஷா ரவியின் 3 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com