வேட்பாளர் குற்றப்பின்னணியை விளம்பரப்படுத்த கோரிய மனு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டு விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிவித்து பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
வேட்பாளர் குற்றப்பின்னணியை விளம்பரப்படுத்த கோரிய மனு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை அச்சு, காட்சி, சமூக ஊடகங்களில் 3 தடவை விளம்பரம் செய்ய கோரி பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டு விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிவித்து பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com