ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம்: டெல்லியில் தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

போலீசார் தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம்: டெல்லியில் தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
Published on

புதுடெல்லி,

காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கர்நாடகாவின் கோலார் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மேடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தெடர்பாக அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தெடரப்பட்டது.

இதில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவதூறு வழக்கில் கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக நீடித்து வந்த ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து, வயநாடு தொகுதியில் நேற்று கருப்பு தினம் கடைப்பிடிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யவும் கட்சி முடிவு செய்து உள்ளது

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அக்கட்சி சார்பில் டெல்லி ராஜ்காட் பகுதியில் இன்று நாள் முழுவதும் சங்கல்ப சத்யாகிரகம் என்ற பெயரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவானது. எனினும், காங்கிரஸ் கட்சியின் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து போலீசார் தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, , கட்சித் தலைவர்கள் பிரியங்கா காந்தி வத்ரா, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் மற்றும் பிற தலைவர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com