நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மனு


நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மனு
x
தினத்தந்தி 9 Dec 2025 10:59 AM IST (Updated: 9 Dec 2025 1:29 PM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீசை மக்களவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

திருப்பரங்குன்றம் மலையில் கல்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர ‘இந்தியா’ கூட்டணி திட்டமிட்டு உள்ளது. சர்ச்சைக்குரிய திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதன்படி தீபம் ஏற்றச்சென்றபோது அங்கு பிரச்சினை ஏற்பட்டது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, நீதிபதியின் தீர்ப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இது தொடர்பாக ஆலோசனை நடத்தின. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் பேசப்பட்டது.இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவது தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் திட்டமிட்டு உள்ளதாக தமிழக எம்.பி. ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில்,சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீசை மக்களவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.. தகுதி நீக்க தீர்மானம் கொண்டுவர, மக்களவையில் 100 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 50 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும், அந்த அடிப்படையில் திமுக சார்பில் மக்களவையில் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்களின் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.

1 More update

Next Story