மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும் - குடியரசுத் தலைவருக்கு 32 எம்.பிக்கள் கடிதம்

இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு 32 எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும் - குடியரசுத் தலைவருக்கு 32 எம்.பிக்கள் கடிதம்
Published on

புதுடெல்லி,

இந்திய கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய கலாச்சார அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. இதில், தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த நிபுணர்கள் யாரும் இடம்பெறவில்லை. இதனை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கிடையில் கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் சேர்க்கப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், கலாச்சார ஆய்வு தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 32 எம்பிக்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

அதில், இந்திய கலாச்சார தோற்றம் குறித்து ஆய்வு செய்யும் குழுவை கலைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். மத்திய அரசால் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட ஆய்வாளர்கள் குழுவில் இல்லை, பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நிபுணர் குழு இல்லை என்றும், தற்போதைய குழுவின் ஆய்வு வரலாற்று திரிபுகளுக்கு வழிவகுத்துவிடும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com