

புதுடெல்லி,
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் இந்தியாவில் பொருளாதார நிலை மேலும் சரியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஊடகங்கள் மூலம் கவனத்தை திசை திருப்புவதால் ஏழைகளுக்கு உதவ முடியாது என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், பல மாதங்களாக நான் எச்சரித்ததை ரிசர்வ் வங்கி இப்போது உறுதிப்படுத்தியுள்ளது.
அரசாங்கம் செய்ய வேண்டியது செலவே தவிர கடனல்ல. தொழிலதிபர்களுக்கு வரி ரத்து செய்வதை விடுத்து, ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். நுகர்வு மூலம் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்யுங்கள்.
ஊடகங்கள் மூலம் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் ஏழைகளுக்கு உதவ முடியாது. பொருளாதாரம் சீர்குலைந்ததை மறைக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.