தீபாவளி போனசாக... கட்டுக்கட்டாக பணம் அள்ளிக்கொடுத்த தொழிலதிபர்; ஊழியர்கள் நெகிழ்ச்சி - வைரலான வீடியோ

இதன்படி, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் போனஸ் தொகை வழங்கப்பட்டது.
தீபாவளி போனசாக... கட்டுக்கட்டாக பணம் அள்ளிக்கொடுத்த தொழிலதிபர்; ஊழியர்கள் நெகிழ்ச்சி - வைரலான வீடியோ
Published on: 

சூரத்

குஜராத்தில் ஊழியர்களுக்கு கட்டுக்கட்டாக தீபாவளி போனஸ் பணம் அள்ளிக்கொடுத்த தொழிலதிபரின் வீடியோ வைரலாகி வருகிறது.

குஜராத்தின் சூரத் நகரம் பல்வேறு வகையான துணி விற்பனைக்கு பிரசித்தி பெற்றது. இந்நிலையில், சூரத் நகரில் உள்ள தொழிலதிபர் ஒருவர், ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை தங்களுடைய குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாடுவதற்காக, அவர்களுக்கு கட்டுக்கட்டாக போனஸ் பணம் அள்ளி கொடுத்து அசத்தியுள்ளார்.

போனஸ் தொகை

ராம்ஸ்வரூப் முண்டே என்ற அந்த தொழிலதிபர், தன்னுடைய ஊழியர்கள் 20 பேருக்கும், ரூ.10 முதல் ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 என ரூ.500 வரையிலான புது கரன்சி நோட்டுகளை வெள்ளி தட்டில் வரிசையாக அடுக்கி வைத்து, அவர்களை அழைத்து வரிசையாக நிற்க வைத்திருக்கிறார். பின்னர் அனைவரும் வந்ததும், அவர் தன்னுடைய மனைவியின் கைகளில் போனஸ் தொகையை கொடுத்து அவற்றை ஊழியர்களுக்கு வழங்கும்படி கூறினார்.

வீடியோ வைரல்

இதன்படி, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் போனஸ் தொகை வழங்கப்பட்டது. இதனால், சிலர் உணர்ச்சிவசப்பட்டு அழுதனர். இதுபற்றி தொழிலதிபர் ராம்ஸ்வரூப் கூறும்போது, வறுமையில் இருந்து இந்த நிலைமைக்கு வளர்ந்து வந்துள்ளேன். அதனால், பணம் இல்லாமல் பண்டிகை காலங்களில் குடும்பங்கள் எப்படி கஷ்டப்படும் என எனக்கு தெரியும்.

என்னுடைய ஊழியர்கள், கடையில் வேலை செய்பவர்கள் என்றில்லாமல், குடும்பத்தின் ஒரு பகுதியாக உள்ளனர் என்றார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

X