ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸ் - மத்திய அரசு அறிவிப்பு

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸ் - மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்தது மத்திய அரசு. அதன்படி, ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்தார். அதிகபட்ச வரம்பாக ரூ.17,951 ஆகவும் இருக்கும் என்றுள்ளார்.

தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் 11.27 லட்சம் ரெயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 11.27 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு மொத்த போனஸ் ரூ.1,832 கோடி வழங்கப்படும் என்று தெரிவித்தள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com