தீபாவளி பண்டிகை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து

ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு கிடைக்க வாழ்த்துவதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
Published on: 

புதுடெல்லி,

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். வெளியூர்களில் இருப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து

மேலும் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகளை வாங்குவதற்காக கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பண்டிகை கால விற்பனை களைகட்டியுள்ளது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது;-

“மங்களகரமான தீபாவளி நன்னாளில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமராஜ்யம்

ராவணனை வென்ற பிறகு பகவான் ஸ்ரீ ராமர் அயோத்திக்குத் திரும்பும்போது மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் நடைபெற்றன. வரிசையாக ஏற்றப்பட்டிருந்த அழகிய விளக்குகளை பகவான் ஸ்ரீ ராமர் கண்டார். இது தீபாவளியின் கலாசார மற்றும் தெய்வீக முக்கியத்துவத்தையும், ராமராஜ்யத்தின் மங்களகரமான தொடக்கத்தையும் குறிக்கிறது.

வழிபாடு

தீபாவளி பண்டிகை, எதிர்மறை செயல்களின் மீது நற்குணங்கள் பெற்ற வெற்றியையும், துன்பங்களின் முடிவையும், மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்வின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இந்த நன்னாளில் மக்கள் மங்களகரமான தொடக்கம், நல்வாழ்விற்காக விநாயகப் பெருமானையும், செழிப்புக்காக மகாலட்சுமியையும் வழிபடுகின்றனர். அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன.

வளர்ச்சியடைந்த இந்தியா

நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு கிடைக்க நான் வாழ்த்துகிறேன். சுற்றுச்சூழலை பாதுகாத்து, நல்லிணக்கத்துடன் வாழ்ந்து, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது தேசபக்தி மிக்க இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்களிக்கட்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X