

பெங்களூரு,
கர்நாடகாவில் 2023ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி நிலவியது. இதையடுத்து, ஆட்சி காலத்தில் முதல் 2½ சித்தராமையா முதல்-மந்திரியாக இருக்கவும், அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரியாக இருக்கவும் காங்கிரஸ் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதையடுத்து சித்தராமையா முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற நிலையில் அவர் 3 ஆண்டுகள் அந்த பதவியை வகித்தார். இதையடுத்து ஒப்பந்தப்படி தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கக்கோரி காங்கிரஸ் மேலிடத்தில் டி.கே.சிவக்குமார் கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம், ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தப்பின் கர்நாடக முதல்-மந்திரி பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடித்ததை கவர்னரிடம் வழங்கினார்.
இதையடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டசபைக்குழு தலைவராக டி.கே.சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், கர்நாடக முதல்-மந்திரியாக பதவியேற்க டி.கே.சிவக்குமாருக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு விடுத்துள்ளார். கர்நாடக முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் வரும் 3ம் தேதி பதவியேற்க உள்ளார். 3ம் தேதி மாலை 4.10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கர்நாடக முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவியேற்க உள்ள நிலையில் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.