முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி
Published on

புதுடெல்லி,

பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இருவரும் வாஜ்பாய் உடலுக்கு இன்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தவர் வாஜ்பாய் அவரது மறைவு வருத்தமளிக்கிறது. தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என்ற நிலை வந்த போதும் அரசியல் சாசனத்தை காத்தவர் வாஜ்பாய். அவரது மறைவினால் நாட்டு மக்கள் அடைந்துள்ள துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன் என தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com