தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி மாறிய விதத்தால் திமுக வருத்தம்: கார்த்தி சிதம்பரம் கருத்து

தமிழகத்தில் நிலையான ஆட்சியை அமைக்கக்கூடிய ஒரு கூட்டணியில் இடம்பெற காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
கார்த்தி சிதம்பரம்
Published on: 

தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரதித்துள்ள சூழலில் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வலியுறுத்த, சோனியா காந்தி, ராகுல் , கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்குப் பிறகு ஒரு கூட்டணியிலிருந்து இன்னொரு கூட்டணிக்கு மாறிய விதத்தையும் அந்த மாற்றத்தையும் இன்னும் கூடுதல் கண்ணியத்துடனும் நயத்துடனும் மரியாதையுடனும் கையாண்டிருக்கலாம் என கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்துள்ளார்.

திமுக வருத்தம்

இது குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கூட்டணியை மாற்றிய விதம் தி.மு.க.வுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். கூட்டணி மாற்றத்தை இன்னும் சிறப்பாகவும், உரிய மரியாதையுடனும், கண்ணியத்துடனும் கையாண்டிருக்க முடியும். இதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்து இருந்திருந்தாலும், தி.மு.க.வால் ஆட்சி அமைத்திருக்க முடியாது. தமிழகத்தில் நிலையான ஆட்சியை அமைக்கக்கூடிய ஒரு கூட்டணியில் இடம்பெற காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்பு இது.

தொண்டர்களுக்கு ஆர்வம்

எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற இயல்பான ஆர்வம் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களிடம் இருந்தது. இருப்பினும், தேர்தலுக்குப் பிறகு ஒரு கூட்டணியில் இருந்து மற்றொரு கூட்டணிக்கு மாறிய விதத்தை இன்னும் கண்ணியமாகவும், மரியாதையுடனும் கையாண்டிருக்க வேண்டும் என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.

X