File Photo: PTI
File Photo: PTI

ஏழுமலையான் தரிசனத்துக்கு இடைத்தரகரை அணுக வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்

பக்​தர்​கள் யாரும் போலி தேவஸ்​தான இணை​யதளத்​தில் முன்​ப​திவு செய்ய வேண்​டாம் என்று தேவஸ்தான நிர்வாகம் கூறியுள்ளது.
Published on

திருமலை:

திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். இதனால்,  ஏழுமலையான் கோவிலில்  பக்தர்கள்   கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது. 

இந்த நிலையில், ஏழுமலையான் தரிசனத்துக்கு இடைத்தரகரை அணுக வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ,திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தை சேர்ந்த விஸ்வநாத் குடும்பத்தினருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தருவதாக கூறி, நடராஜ் நரேந்திர குமார் மற்றும் நடராஜ் சர்மா ஆகியோர் ரூ.90 ஆயிரம் பெற்றுள்ளனர். அதன் பிறகு பணத்தை கேட்கும்போதெல்லாம் ஏதாவது காரணத்தை கூறி ஏமாற்றி உள்ளனர்.

இதுதொடர்பாக விஸ்வநாத் குடும்பத்தினர் திருமலை விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். விசாரணையில், பணத்தை பெற்ற இருவரும் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருவரும் 15-க்கும் மேற்பட்ட பக்தர்களை ஏமாற்றி பணம் பறித்திருப்பதும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து இருவர் மீதும் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பக்தர்கள் யாரும் போலி தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டாம். தரிசனத்துக்கோ அல்லது தங்கும் அறைகளுக்கோ இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com