

புதுடெல்லி,
நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், விதவைகள், கைவிடப்பட்ட பெண்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அவர்களது பிரச்சினைகளை கையாளுவதற்காக மத்திய அரசு நிபுணர் குழுவை அமைக்க பரிந்துரை செய்துள்ளது. எனினும் பல மாநில அரசுகள் இதை பின்பற்றவில்லை. அந்த அரசுகள் பெண்கள் நலனில் எந்த அக்கறையும் செலுத்தவில்லை என்று கண்டித்தனர்.
மேலும் மத்திய அரசின் பரிந்துரைகளை செயல்படுத்தாத ஆந்திரா, காஷ்மீர், கர்நாடகா, ஒடிசா மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் தலா ரூ.50 ஆயிரமும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கு அரைகுறையாக தகவல் தெரிவித்த மராட்டியம், மேற்கு வங்காளம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் அபராதம் விதித்து, அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 31ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.