ராணுவ வீரர்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள்


ராணுவ வீரர்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 Jun 2025 9:16 PM IST (Updated: 3 Jun 2025 9:17 PM IST)
t-max-icont-min-icon

ராணுவ நடவடிக்கை காலகட்டங்களில், தனியுரிமை மற்றும் நடவடிக்கை ரகசியம் குறித்த எல்லைகளை மதித்து நடக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் முக்கிய அதிகாரிகள் நாட்டு மக்களின் கவனத்தை பெற்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் குறித்த பேட்டிகள், விவரங்கள் உள்ளிட்டவை குறித்த செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ராணுவ வீரர்கள், குடும்பங்கள் குறித்த தனிப்பட்ட விவரங்களை வெளியிட வேண்டாம். ராணுவ வீரர்கள், முன்னாள் வீரர்களின் தனிப்பட்ட விவரங்களை பேட்டியாக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.தேசிய நலன் கருதி முக்கியமான நேரங்களில் கட்டுப்பாட்டுடன் ஊடகங்கள் செயல்பட வேண்டும். ஊடகங்களுடன் ஆக்கப்பூர்வமான தொடர்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு அமைச்சகம் உறுதியாக உள்ளது. அதேநேரத்தில், பொறுப்பாக நடந்து கொள்வதுடன், நாட்டிற்காக பணியாற்றுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை கண்ணியத்தை மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Next Story