

புதுடெல்லி,
இந்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய விதிகளின் படி கிரெடிட் கார்டு பில் செலுத்தத் தவறுபவர்களுக்கு, கடைசி தேதிக்கு பிறகு 3 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும். இதன்மூலம் கடைசித் தேதி முடிந்தும் 3 நாட்கள் வரை அபராதம் இன்றி பணம் செலுத்த அவகாசம் அளிக்கப்படும். இடைப்பட்ட காலக்கட்டத்தில் சிபில் ஸ்கோரும் பாதிக்கப்படாது. இந்த புதிய சலுகை ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3 நாட்களையும் கடந்து தாமதம் செய்யும்போது மட்டுமே உங்கள் கடன் வரலாறு எதிர்மறையாகப் பாதிக்கப்படும். சிபில் ஸ்கோர் குறைந்தால், எதிர்காலத்தில் வீடு அல்லது வாகனக் கடன் பெறுவது கடினமாகிவிடும். எனவே, தொழில்நுட்பக் கோளாறுகளோ அல்லது எதிர்பாராத பண நெருக்கடியோ ஏற்படும் சூழலில், இந்த 3 நாள் அவகாசம் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.