சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டாக்டர் கைது

19 வயது இளம்பெண் தனது 15 வயது தம்பியுடன் சிகிச்சைக்காக விர்பாலின் கிளீனிக்குக்கு சென்றுள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர்நகர் அருகே போபா கிராமத்தை சேர்ந்தவர் விர்பால் ஷெராவத். டாக்டரான இவர் அங்கு கிளீனிக் அமைத்து சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் விர்பால் பா.ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது 15 வயது தம்பியுடன் சிகிச்சைக்காக விர்பாலின் கிளீனிக்குக்கு சென்றார்.
அப்போது அந்த இளம்பெண்ணை விர்பால் பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதனை தடுக்க முயன்ற தம்பியை அடித்து உதைத்தார். மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். வீடு திரும்பிய இளம்பெண் நடந்ததை பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விர்பாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story






