கர்நாடக சட்டசபை கட்டிடம் முன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற டாக்டரால் பரபரப்பு


கர்நாடக சட்டசபை கட்டிடம் முன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற டாக்டரால் பரபரப்பு
x

அனேகல் காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக டாக்டர் நாகேந்திரப்பாவுக்கு எதிராக ஏற்கனவே வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் சட்டசபை (விதான் சவுதா) அமைந்துள்ள கட்டிடத்திற்கு முன் டாக்டர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

டாக்டர் நாகேந்திரப்பா ஷிரூர் (வயது 38) என்பவர் விதான் சவுதாவுக்கு முன் வந்து, பொதுமக்கள் பலர் முன்னிலையில் திடீரென விஷ பாட்டிலை திறந்து அதனை வாயில் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதனை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

எனினும் சம்பவத்தின்போது, காவல் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அதனை கவனித்து, உடனடியாக ஓடி போய் அதனை பறித்தனர். அவரை மீட்டு, அவசர சிகிச்சைக்காக பவ்ரிங் அண்ட் லேடி கர்சன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறி வருகிறார்.

வலதுசாரி செயற்பாட்டாளரான புனீத் கெரேஹள்ளி என்பவருடன் சேர்ந்து அனேகல் காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக டாக்டர் நாகேந்திரப்பாவுக்கு எதிராக ஏற்கனவே வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது.

இதுதொடர்பாக நடந்த விசாரணையில், தொடர்ந்து கேள்வி கேட்டு துன்புறுத்தினர் என்றும் இதனால், கடுமையான மனஅழுத்தம் ஏற்பட்டு இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என்றும் தெரிகிறது. இதனை அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விதான் சவுதா போலீசார், டாக்டருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story