11-வது மாடியில் இருந்து குதித்து டாக்டர் தற்கொலை

திருமணமான 3 மாதத்தில் 11-வது மாடியில் இருந்து குதித்து டாக்டர் தற்கொலை செய்துகொண்டார்.
11-வது மாடியில் இருந்து குதித்து டாக்டர் தற்கொலை
Published on

பெங்களூரு: பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பிரித்வி ரெட்டி. இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். டாக்டரான பிரித்வி ரெட்டி பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது மாடியில் இருந்து பிரித்வி ரெட்டி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த அம்ருதஹள்ளி போலீசார் விரைந்து சென்று பிரித்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்தாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுகுறித்து அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com