திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் டாக்டர் எடுத்த விபரீத முடிவு

ரம்ஜான் நோன்புக்காக சையது அகமது சலீம் சுபாஷ் நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.
திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் டாக்டர் எடுத்த விபரீத முடிவு
Published on

மைசூரு,

கர்நாடக மாநிலம் மைசூரு சுபாஷ் நகரை சேர்ந்தவர் சையது அகமது சலீம் (வயது 44). டாக்டரான இவர், மைசூரு மருத்துவ கல்லூரியில் தங்கி எம்.டி. படிப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அவருக்கு குழந்தை பிறக்கவில்லை என தெரிகிறது. இதனால் சையது அகமது சலீம் மனமுடைந்து காணப்பட்டார். மேலும் அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தாலும் தனக்கு குழந்தை பிறக்க வில்லையே என்ற ஏக்கம் சையது அகமது சலீமுக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் ரம்ஜான் நோன்புக்காக அவர், சுபாஷ் நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். இரவு தனது அறைக்கு சென்று அவர் கதவை பூட்டிக் கொண்டார். நேற்று காலை வெகு நேரமாகியும் அவர் கதவை திறந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது சையது அகமது சலீம், வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் என்.ஆர். போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், தற்கொலை செய்துகொண்ட சையது அகமது சலீம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தனக்கு குழந்தை பிறக்காத ஏக்கத்தில் அவர் தூக்குப்போட்டு தற் கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து என்.ஆர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com