மருத்துவமனையின் கதவை திறப்பதில் தாமதம்; மருத்துவருக்கு அடி உதை!! நோயாளியுடன் வந்த நபர்கள் வெறிச்செயல்

மராட்டிய மாநிலத்தில் ஒரு மருத்துவர் நோயாளி ஒருவருடன் வந்த கும்பலால் அடித்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையின் கதவை திறப்பதில் தாமதம்; மருத்துவருக்கு அடி உதை!! நோயாளியுடன் வந்த நபர்கள் வெறிச்செயல்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் ஒரு மருத்துவர் நோயாளி ஒருவருடன் வந்த கும்பலால் அடித்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாராமதி பகுதியில் கிளினிக் நடத்தி வருபவர் மருத்துவர் கெய்க்வாட். சம்பவத்தன்று இரவு, மருத்துவர் தனது வீட்டின் வளாகத்தில் நடத்தி வரும் கிளினிக் கதவை மூடி வைத்துள்ளார். பின் மருத்துவர் கெய்க்வாட் தனது குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது கிளினிக் கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. அவர் சாப்பிட்டு கொண்டிருந்ததால் கதவை உடனடியாக திறக்க முடியவில்லை.

வெகுநேரமாக கதவை தட்டியும் திறக்காததால் ஆத்திரமடைந்த நபர்கள், கதவைத் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த நபர்கள் அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மருத்துவர் கெய்க்வாட் இறுதியாக கதவைத் திறந்தார். உடனே அவர்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரை அடிக்க ஆரம்பித்தனர்.

அவர்களில் ஒருவர் கிளினிக் கதவைத் திறந்து, கெய்க்வாட்டின் மகனை அறைக்கு வெளியே சட்டையை பிடித்து இழுத்து அவரை தாக்கியுள்ளார். அடுத்த அறையில் இரண்டு பெண்கள் நடந்த சம்பவத்தை படம்பிடித்தனர் .மருத்துவரை தாக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளன.

இச்சம்பவம் செப்டம்பர் 6 ஆம் தேதி நடந்தது. இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் மருத்துவரை தாக்கியதாக நான்கு பேர் மீது மாலேகான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com