அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்து சடலத்தின் உடல் பாகங்களை கவ்விச் சென்ற நாய்; அதிர்ச்சி சம்பவம்

அலட்சியமாக செயல்பட்ட 4 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்து சடலத்தின் உடல் பாகங்களை கவ்விச் சென்ற நாய்; அதிர்ச்சி சம்பவம்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் மஹாபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லா நகரில் அரசு மருத்துவமனை உள்ளது. இதனிடையே, குளத்தில் மூழ்கி உயிரிழந்த நபரின் சடலம் மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மருத்துவமனையின் பிணவறைக்குள் இன்று நுழைந்த நாய் அங்கிருந்த சடலத்தின் உடல்பாகங்களை கடித்து குதறியது. பின்னர், சடலத்தின் உடல்பாகங்களை கவ்விக்கொண்டு பிணவறையில் இருந்து வெளியே ஓடியுள்ளது.

பிணவறையில் இருந்து உடல்பாகங்களை கவ்விக்கொண்டு மருத்துவமனை வளாகத்தில் நாய் ஓடியதை சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்

இந்த வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய மாநில சுகாதாரத்துறை, மருத்துவமனையில் அலட்சியமாக செயல்பட்ட 4 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com