

இதில் படிப்படியாக விமான இயக்கம் அதிகரித்து 80 சதவீத அளவுக்கு நிலைமை சீரடைந்தது.ஆனால் மீண்டும் 2-வது அலை பரவி வருவதால் மக்களிடம் விமான பயணம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் பயணத்தை தவிர்த்து வருகின்றனர்.இதனால் கடந்த மாதம் பயணிகள்
எண்ணிக்கை மிகப்பெரும் தொடர் சரிவை கண்டுள்ளது. அதாவது 55 முதல் 56 லட்சம் பயணிகளே சென்ற மாதம் உள்நாட்டு விமான போக்குவரத்தை பயன்படுத்தி உள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
இது முந்தைய மாதத்தை (78.2 லட்சம்) ஒப்பிடும்போது 29 சதவீதம் குறைவாகும்.இது கடந்த அக்டோபர் மாதத்தைவிட குறைவாகும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை எனினும் விமானங்களின் புறப்பாடு எண்ணிக்கையை வைத்து இது மதிப்பிடப்பட்டு உள்ளது.