உள்நாட்டிலேயே யூரியா உற்பத்தி - புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

7 முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டிலேயே யூரியா உற்பத்தி - புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்கட்டமைப்பு, செமிகண்டக்டரக்ள், செல்போன் உற்பத்தி, உர உற்பத்தி மற்றும் ரெயில்வே விரிவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய 7 முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதில் குறிப்பாக ‘யூரியாவிற்கான தேசிய முதலீட்டுக் கொள்கை’ (NIPU-2026) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டிலேயே யூரியா உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய NIPU-2026 கொள்கை யூரியா ஆலை முதலீடுகளை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com