

பசுவின் பெயரிலும், ஸ்ரீராம ஜெயம் சொல்லக்கூறியும் கும்பல் தாக்குதல் சம்பவமும், உயிரிழப்பும் இந்தியா முழுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தும் மாற்றம் காணப்படவில்லை. இந்நிலையில் அமைதியை சீர்குலைக்கவும், கோபத்தை ஏற்படுத்தவும் இந்து கடவுள் ராமரின் பெயரை பயன்படுத்தாதீர்கள் என ராஜஸ்தான் மாநில முதலவர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவிற்கு பதிலளித்து பேசிய அசோக் கெலாட், கடவுள் இந்திரன் நம்மை வாழ்த்துகிறார். உங்களால் இதனை சொல்ல முடியாது, அவர் உங்களுக்கு (பா.ஜனதா) சொந்தமானவர் கிடையாது. நீங்கள் ஸ்ரீராம ஜெயத்திற்கு சொந்தம் கொண்டாடுகிறீர்கள். அதனை நானும் முழங்கினேன், நான் கோஷமிட்டபோது இங்கு அனைவரும் மகிழ்ந்தோம். அவரை நீங்கள் சொந்தமாக்க தொடங்குவது துரதிர்ஷ்டவசமானது. மக்கள் மத்தியில் அமைதியின்மையையும் கோபத்தையும் உருவாக்கும் வகையில் கோஷத்தையும் ஒருவர் எடுத்துக் கொண்டால் அது நல்லதல்ல, துரதிர்ஷ்டவசமானது எனக் கூறியுள்ளார்.